அறிவியல் படிப்பு தாழ்ந்ததா ?

 

ஒரே மேடையில் பத்ரிக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஜெயரஞ்சன் Badri Seshadri VS Jeyaranjan Economist

 மேலே கொடுக்கப்பட்டிருக்கின்ற காணொளியில் பத்ரி சாதி மேட்டிமைத்தனத்துடன் தாழ்வான அறிவியல் படிப்பை  பார்ப்பனர் அல்லாதவர்களை படிக்கச் சொல்வதாக எடுத்துக் கொண்டு ஜெயரஞ்சன் பத்ரியை மறைமுகமாக தாக்கியதாக வழங்கப்பட்டிருந்தது. 

முதலில் பத்ரியை எதிர்த்து என்ன சொல்லி இருக்கிறார் ? இருவரும் ஒரே கருத்தை தானே சொல்கிறார்கள் ?? என்று குழம்பினேன். பரபரப்புக்காக  இப்படி எதிர்மறையாக கட்டமைக்கிறீர்களோ என்று நினைத்தேன். 


பிறகு புரிந்துவிட்டது . அறிவியல் படிப்பு தேவை என்று சொன்னது புண்படுத்தி விட்டது என்று நினைக்கிறேன். பத்ரி யாரையும் பொறியியல் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அறிவு சார் பொருளாதாரமாக நாம் வளர நமக்கு பொறியியல் நிபுணர்களுடன் அறிவியல் நிபுணர்களும் தேவை என்பதையே கூறுகிறார் .  

  அறிவியல் படிப்பை விட பொறியியல் படிப்பு மேலானது என்ற பிம்பம் அமைந்து விட்டது . உண்மையில் இரண்டுமே நல்ல அறிவுத் திறன் தேவைப்படும் படிப்பு தான். நமக்கு நல்ல திறன் வாய்ந்த அறிவியல் நிபுனர்களை உருவாக்கும் கல்வி அமைப்பு வேண்டும். ஆரோக்கியமாக நிலைத்தன்மையுடன்(sustainable) பொருளாதாரம் வளர்ந்தால் அறிவியல் படிப்பு படித்தவருக்கும் நல்ல ஊதியம் கிடைக்கும் . மருத்துவமும் பொறியிலும் போல அறிவியலும் நமக்கு தேவை.

 

 ஆரோக்கியமாக, நிலைத்தன்மையுடன்(sustainable) பொருளாதாரம் வளர்ந்தால் அறிவியல் படிப்பு படித்தவருக்கும் நல்ல ஊதியம் கிடைக்கும் . மருத்துவமும் பொறியிலும் போல அறிவியலும் நமக்கு தேவை. ஆசிரியர் , பொறியியலாளர் , மருத்துவர், அறிவியலாளர் என்று பல துறைகளிலும் நல்ல வருமானத்துடன் நல்ல வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் . இத்தனை வருடமாக பொறியியலும் மருத்துவமும் மட்டுமே நல்ல வருமானமும் நல்ல வேலைவாய்ப்பையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இப்போது நல்ல திறன் உள்ள மாணவர்கள் ஆசிரியர் பணிக்குச் செல்வதில்லை. கல்வியின் நிலை என்ன வென்று நல்ல ஆசிரியர்களிடம் கேட்டுது தெரிந்து கொள்ளலாம். எழுத்தாளரும் தமிழ் ஆசிரியருமான சுகிர்தராணி அவர்கள் நம் கல்வியின் நிலை பற்றிய கவலையை பகிர்ந்து இருந்தார்.

  In healthy , sustainable economy all good professions will yield more or less same income. Do you think Teaching profession is inferior to Engineering and medical ? Do you think other professoins are inferior to Engineering and medical ? But in practical Today Engineering and medical promise a minimal gaurantee for good living. That is because our economy is not progressing in sustainable way.

மாற்று கருத்து உடையவரை கொஞ்சமாவது கவனித்து அவர்களுடன் உரையாடலில் இருப்பது அவசியம்  

Comments