கமலின் அரசியல்

எழுத்தாளர் வா.மணிகண்டனின் பதிவுக்கு என் விரிவான பின்னூட்டம்


//கமலுக்கென்று உறுதியான கொள்கை எதுவுமில்லை. கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு எதையும் வலுப்படுத்தவில்லை. //  கமலின் அரசியலின் பிரச்சனை இந்த இரண்டும்தான். centrist என்று சொல்வது தவறில்லை எவ்வகையில் தன் கொள்கை centrism என்று விரிவும், மிக முக்கியமாக தெளிவும் வேண்டும். கல்விக் கொள்கை, பொருளாதரக் கொள்கை, பொது சுகாதாரம் என்று public administrationஇன் பல துறைகளிலும் தங்களுடைய கொள்கைகள் என்னவென்று அடையாளம் காண வேண்டும். ஏற்கனவே நீங்கள் உட்பட பலர் சொன்னது போல காவிரி பிரச்சனையில் கட்சியின் நிலைபாடு, இன்னும் வேறு பிரச்சனைகளிலும் தெளிவான நிலைபாடு அடையாளம் காண வேண்டும்.

கொள்கைகள் வகுத்தாலும் அதன்படியா செயல்படுகிறார்கள் எல்லோரும் என்று pragmatism பேசுகிறார். நன்று. ஆனால் இக்கொள்கைகள் செயல்படுவதற்கான வேதங்களாக அல்ல ஒரு சட்டகமாக(framework), வழிகாட்டியாக(Guideline) அவசியமானது. writer csk ஒரு முகநூல் பதிவில் கூறியது போல "கொள்கையைச் சொல்லி பதவிக்கு வந்தால்தான் அரசியல்வாதிகள் சொன்னதைப் போல செயல்படுகிறார்களா என்று பார்க்க முடியும்". பொதாம் பொதுவாக நல்ல கல்வி, நல்ல மருத்துவம் கொண்டு வருவோம் என்று சொன்னால் தேர்தலே தேவையில்லை அரசு எந்திரமே அதைச் செய்யும்(accountability and transparency இருக்கும் பட்சத்தில்). கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு தான் அரசியல் பதவிகளும் சட்டமன்றமும்.

ஆம் ஆத்மிக்குமே இதே பிரச்சனைதான் ஊழல் ஒழிப்பு தவிர அவர்களிடம் தெளிவான கொள்கையோ நிலைபாடோ இல்லை இருந்திருந்தால் மத்தியில் அவர்கள் இன்னும் ஆக்கபூர்வமான மாற்று சக்தியாக வந்திருந்திருக்கலாம்.

//வாக்கு அரசியலில் நீங்கள் யார் என்று காட்டுவதைவிடவும் உங்களின் எதிரி யார் என்று சுட்டிக் காட்ட வேண்டும்.// சரியான கருத்து ஆனால் இக்கருத்து தனி நபர் துதிப்பாடல்/ வெறுப்பு என்ற துருவப்படுத்துதலை அல்லது personality politics நியாயப்படுத்துவதாக சிலர் எடுத்துக்கொள்ளக் கூடும்.  "நாம் எந்தவிதத்துல மாற்று என்று கூற வேண்டும் . நாம் எவ்விதத்தில் செயல்பட்டு நல்ல கல்வி, மருத்துவம் இன்னபிறவற்றை கொண்டுவரப் போகிறோம், மாற்றுத்தரப்பு செயல்படும் விதத்தில் உள்ள கோளாறுகள் என்ன ? போன்றவை முக்கியம்" என்பதாகத் தான் நான் இதை எவ்வாறு புரிந்துகொள்கிறேன். populism புரையோடி போயிருக்கும் நவீன யுகத்தில்(நிலபிரபுத்துவ காலம் முடிந்து முதலாளித்துவ காலம் தொடங்கியதிலிருந்து நவீன யுகம் என்ற வரையறையில்) கொஞ்சம் hero-villain கட்டமைப்பு தேவைபடுகிறது நடைமுறையில் என்பதை புரிந்துகொள்கிறேன் அளவோடு இருந்தால் நன்று.

குறைந்த பட்ச நேர்மை, integrity கூட இல்லாத இந்தச் சூழலில் அதையே ஒரு கொள்கையாக கமல் முன்வைக்கிறார். அதற்கு முக்கியத்துவம் வேண்டும் தான்(உண்மையில் integrity தான் முதன்மையானது). ஆனால்  கொள்கை என்பதை எப்பொழுதும் அரசியலில் replace செய்ய முடியாது ஏன்னென்றால் தேர்தல் என்பதே மக்களாட்சியில் ஒரு நாடு தன்னுடைய கொள்கையை இனம்காண தான்.

ஊழலை ஒழிப்பதையாவது எவ்வாறு என்று தெளிவுபடுத்த வேண்டும்( அல்லது கொள்கை வேண்டும்).இதையும் நீங்கள் கூறியிருப்பதாக ஞாபகம். அனேகமாக அவர் மனதில் இருப்பது "decentralization மூலமாகவும், கூடுதல் வெளிப்படைத்தன்மையை, accountabilityயை அரசு எந்திரத்தில் சட்டம் இயற்றி கொண்டுவருவது மூலமாகவும் செய்யலாம் " என்று இருக்கக் கூடும். ஆனால் அது அவர் மனதில் இருந்தால் எவ்வாறு அவர் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் efficientஆக அதை செயல்படுத்த முடியும். இப்பொழுதிருந்தே விதைக்க வேண்டுமே.

ஒரு அவதானிப்பு

Comments

  1. மதவாத கட்சியை அகற்றுவதே கூட்டணியின் லட்சியம் என கூறி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
    கமல் "மக்கள் நலன்" தான் கொள்கை எனக் கூறுகிறார்.
    யாருமே வழி வகை வாய்க்கா(ல்) வரப்பு எப்படின்னு சொல்லல.
    மதவாத கட்சியை அகற்றும் லட்சியத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மக்கள் நலனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. //மதவாத கட்சியை அகற்றும் லட்சியத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மக்கள் நலனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.// ஆம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

      ஆனால் வா.மணிகண்டனின் இரண்டாவது விமர்சணம் முக்கியமானது . அடிப்படை கட்டமைப்பு என்பது கட்சியின் மாவட்ட , வட்ட கிளைகள் , கட்சி பொறுப்பாளிகள், இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைமைகள், பிற தன்னார்வலர்கள்(தொண்டர்கள் என்பதை வேண்டுமென்றே தவிர்க்க விரும்புகிறேன். volunteer என்பது செயலூக்கத்தை கோருவதாக உண்ர்கிறேன்) ஆகியவைதான். அக்கட்டமைப்பு நிலைத்திருக்க செயலூக்கத்துடன் களப்பணியாற்ற வேண்டும் இல்லையென்றால் காணாமல்போய்விடும்.

      எனது கருத்து, இத்தகைய அடிப்படைக் கட்டமைப்புடன் களப்பணியாற்றும் போது "வழி வகை வாய்க்கா(ல்) வரப்பு எப்படி" என்பதை ஒரு கட்சி மக்களுக்கு உண்ர்த்திவிடும். Formalஆக கொள்கை என்று சொல்லாவிட்டாலும் செயல் மூலம் திமுக-வும் அதிமுக-வும் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இங்கே செயல் என்பது கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கும் வரை உள்ள காலக்கட்டத்தில் களப்பணியாகவும்; ஆட்சியில் நலத்திட்டங்கள், சட்ட ஒழுங்கு நிர்வாகம் உள்ளிட்ட அரசு நிர்வாகமாகவும்; ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பரசியலாகவும் உள்ளதாக கருதுகிறேன்.

      ஆட்சிக்கு வராத ஒரு புதிய கட்சி போராட்டங்கள் மற்றும் இன்ன பிற களப்பணிகள் மூலமாக தன்னை வெளிப்படுத்தியாக வேண்டும், தன் நிலைபாட்டை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அப்படி ஒன்று நடக்காதது கமலின் அரசியலில் கொள்கையின்மை என்பததைவிட முக்கியமான குறைபாடு.

      அடுத்த குறைபாடு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மோடி, கருணாநிதி ஆகியவர்கள் personality driven politicsக்கு எடுத்துக்காட்டுகள் என்றால், கமல் single person politics என்று புதிய வகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது.

      Delete
    2. //அக்கட்டமைப்பு நிலைத்திருக்க செயலூக்கத்துடன் களப்பணியாற்ற வேண்டும் இல்லையென்றால் காணாமல்போய்விடும்//
      ம்.சரிதான் பணம் செலவளி(ழி)க்க முடியாத பட்சத்தில் களப்பணியால் தான் கொஞ்சமாவது கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.
      மற்றபடி இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று எந்த அழுத்தமும் இல்லையே.
      மற்றபடி அந்த பதிவில் ( http://www.nisaptham.com/2019/03/blog-post_7.html )
      Nandhu பின்னூட்டமளித்தது போல் தனியாட்டம் ஆட முடியாமல் செய்திருக்கிறார்கள் தானே.
      மற்றபடி குறைபாடுகளை சரியாக்கிக் கொள்ளலாம்.
      சட்டமன்ற இடைத்தேர்தலில் மநீம 3, அமமுக 5, மிச்சமிருப்பதில் திமுக வென்றால் தழிழக அரசியல் எப்படி இருக்கும்??

      Delete
    3. தற்காலிகமாக சிறிய கட்சிகளுக்கு Nandhu கூறியது போல பேர சக்தியை கொடுத்தாலும் , அமமுக ஒரு சக்தியாக (அதாவது ஒரு உறுப்பினருடன் வந்தால் கூட ) ஆரோக்யமானதாக கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் தமிழக அரசியலில் இருந்து முற்றும் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய கட்சிகளில் அமமுகவும் ஒன்று.

      மற்றபடி கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் , accountability&transparencyக்காக, சுற்றுசூழலுக்காக, கடை நிலை மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்க்காக போராடுபவர்கள் வருவது அவசியமானது. மநீம-வில் அத்தகையவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. மநீம-வின் ஒரு உறுப்பினராவது சட்டமன்றம் செல்வது ஆரோக்யமானது தான்.

      அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான மறைந்த ஞானி அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ம நீ ம வில் இனைந்திருந்திருப்பாரோ என்னவோ ? முன்பு கமலின் அரசியல் நுழைவு பற்றி வரவேற்று எழுதியிருந்ததாக நினைவு.

      Delete

Post a Comment