Excel இல் EMI கண்டுபிடிப்பது எப்படி ? - பாஸ்டன் ஸ்ரீராம்

Excel இல் EMI கண்டுபிடிப்பது எப்படி

வீட்டுக்கடனோ வண்டி கடனோ வாங்கும் போது வங்கி சொல்லும் மாதாந்திரத் தவணையை (EMI) சரி பார்க்கவேண்டும். சொன்ன வட்டிதான் வாங்கறாங்களா, வேறேதும் Hidden Charges இருக்கா என்பதை சரி செய்யும் வழி.

உதாரணம் : வீட்டின் விலை 50 லட்சம், 20% down payment 10 லட்சம். எனவே கடன் தொகை 40 லட்சம்
வட்டி விகிதம் 10%, Tenure 20 வருசம். இதுக்கு மாதத்தவணை கண்டுபிடிப்படிப்பது எப்படின்னு பாப்போம்

picture1
படம் 1

படம் 1 : மைக்ரோசாஃப்ட் எக்சல் பக்கம் ஒன்றை திறந்து கொள்ளவும் (ஒரிஜினல் சாஃப்ட்வேராக இருத்தல் நலம் – மைக்ரொசாஃப்டுக்கு)
அதில் தகவல்களை இன்புட் செய்யவும். கடன் தொகையை மைனஸ் குறியுடன் குறிப்பிட வேண்டும்.
வட்டி 10%, தவணை மாதாமாதம் செலுத்தப் படுவதால் Tenure ஐ மாதமாக மாற்றி (20 * 12 ) 240 என்று குறிப்பிடவும். EMI கட்டத்தில் வந்து க்ளிக் செய்யவும்

Picture2
படம் 2

படம் 2 : EMI இடத்தில் க்ளிக் செய்ததும் Name Box (Top left corner beneath clipboard) அந்த கட்டத்தின் இடமதிப்பைக் காட்டும். இந்த உதாரணத்தில் அது B6 (column B Row 6) cell. B6 இல் “=” டைப் செய்யவும்.
செயததும் Name Box – Functions மோடுக்கு மாறிவிடும். இதில் இருக்கும் Drop Down இல் PMT option (stands for Payment) தெரிவு செய்யவும். செய்ததும் Function Arguments box திறக்கும். Cursor ரேட்டுக்கு அடுத்து வந்து நிற்கும்.

picture3
படம் 3

படம் 3 : வட்டியை குறிப்பிட்ட செல்லை க்ளிக் செய்யவும். செய்தவுடன் வட்டி இருக்கும் செல்லின் இடமதிப்பு (இந்த உதாரணத்தில் B4) Functions argument இல் Rate க்கு அடுத்து வரும். பெரும்பாலான வங்கிகள் monthly diminishing balance முறை உபயோகிக்கின்றன. அதாவது ஒவ்வொரு மாத இறுதியிலும் உங்க கணக்கில் போன மாத தவணை போக மிச்சமிருக்கும் principle கணக்கிடப்படும். அடுத்த மாத வட்டி இத்தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். எனவே இந்த செல்லில் divided by 12 என்று குறிப்பிடவும்.

Cursor அடுத்து Nper இல் வந்து நிறுக்கும். இது total number of payments aka tenure of loan. இதற்கு tenure குறிப்பிடப்பட்ட செல்லை க்ளிக்கியதும் அதன் இடமதிப்பு இங்கு வந்து சேரும். நம் உதாரணத்தில் இது B5

அடுத்தது PV – அதாவது Present Value aka Loan Amount / principal. இதற்கும் மேலே சொன்னது மாதிரி Principal குறிப்பிடப்பட்ட செல்லை க்ளிக்கவும். செயததும் அதன் இடமதிப்பு பெட்டிக்கு வரும். இங்கு அது B3

அடுத்து இருக்கும் FV (Future Value) & Type ரெண்டுலேயும் ஒண்ணும் செய்ய வேண்டாம்
FV என்பது குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் எவ்வளவு முதல் மிச்சம் இருக்கும் என்று குறிப்பது. வங்கிக் கடன் அனைத்திலும் குறிப்பிட்ட காலத்தில் நாம் முதல் முழுவதையும் தந்திருக்க வேண்டும் என்பதால் இது இங்கு உபயோகமற்றதாக ஆகிறது.
ஒரு பேச்சுக்கு, ஒருவரிடம் கடன் வாங்கறீங்க, தொகை 10 லட்சம் வட்டி 10%, அஞ்சு வருசத்தில் மாதத்தவணை மூலம் 5 லட்சம் அடைக்கறீங்க, 5 வருச முடிவில் 5 லட்சம் முதல் பெண்டிங் இருக்கும் அதை ஒரே தவணையில் தருவதாக கடன் வாங்குகிறீர்கள் என்றால் அப்போது இப்பெட்டியில் 5லட்சம் குறிப்பிட்டு அப்ப என்ன மாதாந்திரத் தவணைன்னு கண்டுபிடிக்கலாம்.

Type தவணை மாத முதலில் கட்டுவதா கடைசியில் கட்டுவதா என்கிற ஆப்சன் இதுவும் நமக்குத் தேவையில்லை

இவற்றைச் செய்ததுமே EMI பாக்ஸில் தெரியவரும் (இங்கு இது 38600.87 ரூபாய்) என்று தெரியும். Ok click செய்யவும்

picture4
படம் 4

படம் : 4 : செய்ததும் மாதாந்திரத் தவணைத் தொகை ஆட்டோமேட்டிக்காக எக்சலில் தெரியும்

-பாஸ்டன் ஸ்ரீராம்

Original: https://www.facebook.com/bostonsriram/posts/1201071653257845

 I have shamelessly copied from above Facebook post by Boston Sriram without his knowledge. His blog 

Comments