buying guide clothes

நீங்கள் வாங்கும் ரெடிமேட் பேண்ட், ட்ரவுசர், ஜாக்கர், ட்ராக் பேண்ட், ஷார்ட்ஸ், ஸ்கூல் பேக், ரெயின் கோட், ஜெர்கின், ஜாக்கெட்,ஜம்பர்,

மனி பர்ஸ் என zip வைத்தது எது வேண்டுமானாலும் இருக்கட்டும், அதை YKK நிறுவன zipper இருக்கிறதா என்று மட்டும் பார்த்து வாங்குங்கள், காரணம் இது தருகிற முழு ஆயுட்கால உழைப்பு தான்.

இது மட்டும் சரியாக பார்த்து வாங்கினால் போதும் அந்த பொருளை குப்பையில் வீசி எறியவே மாட்டோம், waste wealth ஆக முடங்காததால் சுற்றுச்சூழலுக்கு நல்லது,இதன் zip runner உறுதியானது,வண்ணம் போகாது, நெளியாது, இதன் guides ஓடுபாதை அகண்டு வராது, காரணம் எத்தனை அடித்து துவைத்தாலும் இதன் runner உடையாது, lock வேலை செய்யும், எந்த வாஷிங் மெஷினுக்கும் ஏற்றது.

என் தாய்மாமா மதுரையில் custom made tailor, சிறுவனாக இருக்கையில் அவர் கடையில் விடுமுறையில் வேலை செய்யும் போது இந்த விலை சற்று கூடிய YKK நிறுவன zip மட்டுமே வாங்க சொல்லுவார்,madura coats (mcl) நிறுவன

zip கூட வாங்கினால் தலையில்

கொட்டுவார், சிறுவர்களின் சீருடை

என்றாலும் போலீஸ் அதிகாரிகள், ஓட்டல் சிப்பந்தி சீருடை என்றாலும் அந்த YKK நிறுவன zip மட்டுமே இடுவார், அத்தனை தொழில் பக்தி, இன்றும் மாறவில்லை. (என் மாமா 70ம் ஆண்டில் தையல் கடையில் எடுபிடி பையனாக

இருக்கையில் வாங்கியது YKK zip, madura coats நயம் collar canvas, நைலான் பட்டன், அதை இன்றும் தொடர்கிறார், அதனோடு இன்று collar bone வைக்காமல் விட மாட்டார், அவர் தைக்கும் சட்டையில் காலர் தழும்பு தழும்பாக பேஸ்டிங் போகாது, எத்தனை ப்ரஷ் இட்டாலும் காலர் கிழியாது.)

உங்கள் custom made டெய்லர் YKK zip உபயோகிக்காவிட்டால் அவரிடம் குறிப்பிட்டு சொல்லுங்கள்,கூடுதல் பணம் தருகிறேன் என சொல்லுங்கள், காலத்துக்கும் அந்த பேண்ட் zip மாற்ற வேண்டி வராது.

இந்த YKK ன் முழு விரிவாக்கம் Yoshida Kogyo Kabushikikaisha, இதன் நிறுவனர் ஜப்பானியர், இவர்களின்

தொழிற்சாலை ஜார்ஜியாவில் 1934 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இன்று நாள் ஒன்றுக்கு ஐம்பது லட்சம் zip தயாரித்து உலகம் முழுக்க ஏற்றுமதி செய்கின்றனர். தங்கள் ஜிப்பை யாரும் போலியாக தயாரிக்காமல் இருப்பதை கண்காணிக்கின்றனர்.

http://www.ykkfastening.com/

From https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02zTXTUmHjGnpdAuGPCwuzcPphfPMajk1AKhYn7833a4B9ucbXi5KNa2D6BjC45rYHl&id=750161339

Comments