வல்லரசு என்றால் என்ன ? அல்லது செய்திகட்டுரை எப்படி உருவாக்கப்படுகிறது ?

the newyork timesன் இந்த செய்திக்கட்டுரையை படிக்கும்போது தோன்றுகிறது இது தான் வல்லரசு என்று. வல்லரசு என்று பல வருடங்களுக்கு முன்பிருந்தே பேசப்பட்டாலும், இதுவரை அது என்ன வஸ்து என்ற ஒரு அறிமுகம் கூட இல்லாமல் தான் இத்தனை நாள் இருந்திருக்கிறேன்.

விஜயகாந்த் படம் பார்த்து புல்லரிக்கும்போது அனேகமாக அமேரிக்காவின் இடத்தில் நம் நாட்டை வைத்து கற்பனை செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.  அரவிந்தன் நீலகண்டனின் தினமணி கட்டுரைத் தொடரில் உலகெங்கும் உள்ள பாகானிய, காஃபீர்களின் பண்பாடுகள், மொழிகள், மதங்கள் காக்கபட வேண்டும் என்ற பெரியண்ணன் கனவை விதைத்தார். பிறகு இறையாண்மை பற்றி ஜெயமோகன் கட்டுரைகளில் படித்துத் தெரிந்துகொண்டேன். 

இந்த செய்திக்கட்டுரையில் சீனா எங்கல்லாம் துறைமுக கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவலை Johns Hopkins Universityஇடம் இருந்து பெற்று காண்பிக்கிறது.  அறிவுத்துறை எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. நம் அரசாங்கம் உலகை பற்றிய தகவல்கள் அறிவுகள் எத்தகையாவியாக இருக்கக்கூடும் ? இந்த தரத்தை நாம் எட்ட எவ்வளவு நாள் ஆகும் ?

அது போக இந்த செய்திக்கட்டுரைக்காக ராஜபக்ஷேவை பல மாதங்களாக தொடர்புகொள்ள முயற்சி செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஒரு செய்திக்கட்டுரைக்கு பல மாதங்கள் எடுத்துக்கொண்டு உழைப்பு கொடுக்கப்படுகிறது.  இது போன்று தமிழில் எப்போது நிகழ ?

Comments