இன்று காலை பத்து அரை மணிக்கு அலுவலகம் சென்று அமர்ந்து மடி கணினியை திறந்து முதல் வேலையாக jeyamohan.in தளத்துக்குச் சென்றேன். திருவனந்தபுரத்தில் பேசுகிறார் பதினோரு மணிக்கு. மகிழ்ச்சியும் தொட்டடுத்து ஏமாற்றமும் எனக்கு. விளம்பர படத்தின் கீழ் நுனியில் சமூக ஊடகத்திற்கான உரலிகள் QR படங்களாக இருந்தன நேரலையாக கேட்கலாம் என்று முயன்றேன். சரி பேச்சை கேட்க முடியவில்லை எனினும் ஜெயமோகனை சந்திக்கவாவது போகலாம் என்று கிளம்பிவிட்டேன். பதினொன்றே காலுக்கு நிகழ்விடத்தை அடைந்தேன். நல்ல வேளையாக நிகழ்வு 11.30 க்கு ஆரம்பித்தது.
படைப்பாற்றல் என்பது ஒரு அறிவார்ந்த இயக்கம் (intellectual process) அல்ல . அது ஒரு சிந்தனை(thinking?) அல்ல . படைபயற்றல் என்பது ஒரு கனவு. "source of creativity" படைப்பாற்றலின் மூலம் எது என்று t . s . எலியட் தன் creativity and individual talent என்ற கட்டுரையில் ஆராய்கிறார். ஒரு நாற்காலியை உருவாக்குவதோ ஒரு கட்டிடத்தை உருவாக்குவதோ ஒரு சாஃப்ட்வேரை உருவாக்குவதோ படைப்பாற்றல் அல்ல.
வரலாற்று காலதுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகாராஷ்டிட்ராவின் ரத்னகிரி பகுதியில் சுற்றி அலைந்திருக்கிறோம். அங்கு காணப்படும் ஓவியங்களை நாம் அர்த்தபடுத்திக்கொள்வதற்கு பண்பாட்டுத் தொடர்ச்சி இல்லை . last ஐஸ் age என்ற ஊழி காலத்தில் மனித இனம் தப்பி பிழைக்க உலகெங்கும் சிதறி விட்டன. அதனால் பண்பாட்டுத் தொடர்ச்சி அறுந்தாலும் நம்முடைய sub conscious ஒன்று தான் நாம் அவர்களுடைய பிள்ளைகள் தான். எனவே இதை அறிய நாம் நம் கனவால் தான் முடியும்.
மந்தா ரே என்னும் மீனின் உருவம் ஒரு பாறையில் வரையப்பட்டிருந்தது. அதன் உள் பல உயிரினங்கள் வரையப்பட்டு இருந்தன. பிலிப்பைன்ஸ் முதல் ஸ்பெயின் வரை இது போல மந்த ரே ஓவியங்கள் கிடைக்கின்றன . அது ஒரு அன்னையாக இருக்கலாம் .
இந்த பாறை ஓவியங்களை அர்த்தப்படுத்திக்கொள்ள archaeoDreaming என்னும் முறை ஒன்று உள்ளது. கற்காலக் கனவுகள்- 5 | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)/
Comments
Post a Comment