சயனைடுன்னு வேதிப்பெயர் இருந்திட்டா அது விஷமா இருக்கனும்னு அவசியம் இல்ல. சயனைடு அயனி மட்டும்தான் நஞ்சு. அதே சயனைடு வேற மூலக்கூறு பிணைப்புகள்ல இருந்தா விஷம் இல்ல. உதாரணமா வைட்டமின் பி12 ல சயனைடு இருக்கு. ஆனா அது நச்சு இல்ல. இந்தச் செய்தில அவங்க குறிப்பிட்ற வேதிப்பொருள் பேரு பொட்டாசியம் ஃபெர்ரோ சயனைடு (Potassium ferro cyanide). அது விஷம் இல்ல. பள்ளி வேதியியல் ஆய்வகங்கள்லயே அதச் சாதாரணமா புழங்குவாங்க. அந்த வேதிப்பொருள உப்பு கட்டிதட்டாம இருக்கச் சேர்க்கப்படுது. தலைப்பு வச்ச நிருபர் பீதியக் கிளப்பனும்னு இப்படி தலைப்பு வச்சுட்டார் போல.
By ஹாலாஸ்யன்
Original :. https://m.facebook.com/story.php?story_fbid=481958005946458&id=413984502743809&refid=28
Comments
Post a Comment