Electoral Politics - தேர்தல் அரசியல்

ஜெயமோகன் ஆட்சி மாற்றமும் அரசியலும் மேலோட்டமானவை மக்களுடைய கருத்து மாற்றத்தை பாதிக்கக்கூடிய இலக்கியம்/எழுத்து மேலும் விசை கொண்டது என்று மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். Gramschi அறிவுஜீவி பற்றிய கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவார். இருபெரும் கட்சியை சேர்ந்தவர்கள் உச்சகட்ட நாடகீய தருணங்களை உருவாக்கி நம்மை கொந்தளிக்கச் செய்துகொண்டே இருப்பார்கள். அந்த சமயங்களில் ஜெ.மோ-வுடைய  இந்த கருத்து நினைவுக்கு வரும். ஆனால் மனதுக்கு convince ஆகாது. இதை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றும்.  எழுத்தாளர்கள், கலைஞர்கள், களப்பணியாளர்கள் ஆகிய அறிவுஜீவிகளின் இயக்கம் தான் உண்மையில் மக்களின் கருத்தை மாற்றுகின்றன; அரசியல்வாதி அக்கருத்தால் மக்களை mobilise செய்கிறான். ஒரு புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் பத்ரியும் இன்னொருவர் யார் என்று மறந்துவிட்டது இயக்க அரசியலா தேர்தல் அரசியலா என்று  விவாதித்தனர். மற்றவர் தேர்தல் அரசியலுக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும், இயக்க அரசியல் சிறிய பணியாற்றுமே ஒழிய அதனால் பெரிய பயன் இல்லை என்பதாக வாதிட்டார்.
அந்த சமயத்திலேயே தேர்தல் அரசியல் அல்லாத இயக்கத்திற்கு உரிய முக்கியத்துவம் என்னவென்று உணர்ந்திருந்தாலும் இளங்கோ பிச்சாண்டியின் இந்த பதிவை படிக்கும் போது ஒன்று தோன்றியது . இந்த தேர்தல் அரசியல் கிட்டத்தட்ட facebook, whatsapp, mobile phone, internet , டீவி வரிசையில் வைக்க வேண்டியது. பொது நிதிகளை கையாள்வதில் உள்ள போட்டிகளில் உள்ள நரிகளின் கருவி அது நரிகள் துருவப்படுத்தல்களிலும், மிகைபடுத்தலிலும், திரித்தலிலும் இன்ன பிற தகிடுதத்தங்களிலும் ஈடுபடும். அது தேர்தல் அரசியலின் அங்கமாக இருக்கிறது. சமூக ஊடகங்கள்,  டீவி போலவே தேர்தல் அரசியலும் நம் மனதின் கவனத்தை சிதைக்கிறது.

உங்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் உங்களின் லட்சிய உலகை உருவாக்க வேண்டிய பாதையை நோக்கி போக விடாமல் தேர்தல் அரசியல் கூச்சலிட்டு , நாடகமிட்டு அதற்கு தரப்பட வேண்டிய நியாயமான கவனத்தையும் மீறியவற்றை கோருகின்றன.
  • தேர்தலில் வேட்பாளர்களில் குறைந்த பட்ச நேர்மை கொண்ட, மக்களுக்கு விசுவாசமுள்ள எவர் என்று தேர்ந்தெடுக்கலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்டவர் அவ்வாறு இருந்தால் உங்கள் கொள்கை, நிலைப்பாட்டுக்கு ஒத்துவருபவரை தேர்ந்த்தெடுக்கலாம்
  • அடுத்தாக அவரின் செயல்திறனையும் அறிவையும் கருத்தில் கொள்ளலாம்.
இங்குதான் தொழில்முறை அரசியல் கட்சிகள் நம்மை வீழ்த்தும்.  "எதிர்தரப்பு மட்டும் வந்து விடக்கூடாது வந்தால் அவ்வளவுதான்" என்று கூறும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என்று அனைவருக்கும் இந்த வாய்ப்பாடு தான்.  நம்மை ம. ந. கூ என்று வசைபாடும். அடுத்த வசைகள் கட்சியை பொறுத்து மாறும். பார்ப்பன அடிவருடி என்றோ, pseudo secularists என்றோ.


நாம் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடு என்னவென்றால்
  1. முன் குறிப்பிட்டுள்ள படி வாக்களித்தல்
  2. அடுத்து active democracy யில் பங்களிப்பது.
    1. சட்டப் பஞ்சாயத்து, அறப்போர் போன்ற இயக்கங்களுடன்  accountability காகவும் transparencyகாகவும் பணியாற்ற வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டம், லோக் பால்/லோக் ஆயுக்தா போன்றவை அவசியமானவை.
  3. கடைசியாக decentralisationஓ free marketஓ welfare schemesஓ education policyஓ உங்கள் கொள்கை, நிலைப்பாடுகளை நன்று ஆராய்ந்து ஏற்றுக்கொண்டு சக குடிமக்களை mobilise செய்ய பணியாற்றலாம்.

இவ்வாறாக ஜனநாயகத்தில் பங்களிக்க வேண்டுமேயன்றி அவர்களின் நாடகக் கூச்சலுக்கு அடிபணிந்து நம்முடைய வாக்களிக்கும் உரிமையை வீணடிக்கக்கூடாது.

Comments