Reply : ஜெ(சு)யமோக ரசிகர் பட்டாளமும் இலக்கிய வாசிப்பும்

My reply to this post
மு. சிவகுருநாதன்,
//படைப்பின் அரசியலை பேசுங்கள். உங்களை யாரும் தடுக்கவில்லை.// நதிக்கரைக் குழுவினர் உங்களிடம் கோருவது ஏதாவது ஒரு படைப்பை பற்றி விவாதிக்கும்போது அதில் இருக்கும் அரசியலை விவாதிக்கலாம், ஆனால் தனியாக அரசியல் பற்றிய விவாதங்கள் வேண்டாம் என்றுதானே. ஒருவேளை அரசியல் கருத்தியல் விவாதங்களுக்கு நீங்கள் தனியாக குழுவோ மாந்திர வாராந்திர கூடுகையோ தொடங்கியிருக்கலாம்.
=>நதிக்கரைக் குழுவினரிடம் உள்ள குறையாக நீங்கள் கூறுவதில் ஒன்றை ஏற்கலாம். ஜெமோவின் கருத்தாதிக்கம், அவரின் செல்வாக்கு குழுவினரிடம் அதிகமாக உள்ளது. அது எனக்கு இயல்பாக தோன்றுகிறது. நீங்கள் அதனால் அவர்கள் தவறவிடுவதை விவாதமாக கட்டுரையாக விரித்து கூறியிருக்கலாம். (உதாரணத்திற்கு படைப்பின் விவாதத்தில் அவர்கள் தவறவிடும் கோணம் அது போல).
=>ஒருவர் மற்றவரிடம் ஒன்றை கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் எனும்போது இரண்டாமவர் மீது மரியாதை வருவது இயல்பே.
=>திருவாரூரில் இலக்கிய வாசிப்பே இல்லை என்பது ஏன் அபத்தம் என்று விவாதித்திருக்கலாம் இலக்கியக் கூட்டங்களையோ, திருவாரூரில் உள்ள இலக்கியம் அறிந்த நபர்களையோ, ஊரில் நடைபெற்ற செயல்பாடுகளையோ, உங்களுக்கு இலக்கியத்தில் அறிமுகம் கிடைத்த சூழ்நிலையையோ பகிர்ந்திருக்கலாம்
=>”வெற்று சில்லறை அரசியல்” போன்ற சொல்லாடல்கள் உங்கள் அகத்தை புண்படுத்தியுள்ளது. உங்களுக்கு முதன்மையான விடயங்கள் மற்றவர்களுக்கு சில்லறையாக இருக்கலாம் என்று எளிதாக கடந்த்திருக்கலாம்.
=>//நாங்கள் சொல்லும் உன்னத இலக்கியங்களை (உம்: ஜெமோ, யுவன் சந்திரசேகர்) வாசித்துவிட்டு வாருங்கள்// இது தவறான புரிதல். எல்லா வாசிப்பு குழுக்களும் அடுத்த கூட்டத்தில் இந்த புத்தகத்தை வாசிப்போம் என்று முடிவுசெய்து; அதை எல்லோரும் வாசித்து ;கூடத்தில் விவாதிப்பதாக தான் நடக்கிறது. உங்களிடமும் புத்தகப் பரிந்துரைகளை கோருகின்றனர். நீங்களும் புத்தகங்களை பரிந்துரைத்து அவர்கள் தொடர்ந்து நிராகரித்தால் உங்கள் குற்றசாட்டு நியாயம்
“இலக்கியம் படித்துவிட்டு வாருங்கள்” என்று கூறுவதாக நீங்கள் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ற குழுவுடன் இனைந்து பங்களிப்பாற்ற வாழ்த்துக்கள்.
இத்தகைய அரசியல்/கருத்தியல்/இலக்கிய சர்ச்சைகளை அறிவியக்கத்தின் வெளிப்பாடுகளாகவே கருதுகிறேன். அளவோடு இருக்கும்வரை ஆரோக்யமானதுதான்.

Comments