ஒரு போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இன்னொன்று நாளை நடக்கிறது. தில்லியில் ஒன்று தொடர்கிறது. ஆங்காங்கே நாளும் நடந்து கொண்டிருக்கிறது. நல்லது. இன்று கொதிக்கும் அரசியல் கட்சிகள் இதுவரை எப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்று வரலாற்றை வாசித்தால். . .
காவிரியும் கட்சிகளும்: காங்கிரஸ்
காவிரி ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். மைசூர் தனி சமஸ்தானமாக இருந்த போதிலும் அதில் பிரதிநிதித்துவ சட்டசபை ஒன்றிருந்தது. அதில் உறுப்பினராக இருந்த எலியட் என்ற ஆங்கிலேயர் காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள மைசூருக்குத்தான் உரிமை உண்டு அதில் தலையிடும் உரிமை சென்னை மாகாணத்திற்கு இல்லை என 1891ல் பேசினார்.
கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே, சோழர்கள் காலத்திலேயே டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை நடந்து வருகிறது, அப்போதிலிருந்தே விவசாயிகள் நீருக்கான உரிமை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் அதற்கு பதிலளித்தனர்,
இதைத் தொடர்ந்து 1892ல் மைசூர் சமஸ்தானத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தம், இரு மாநிலங்கள் தொடர்புடைய பல்வேறு முதன்மையான ஆறுகள், ஓடைகள், நீர் நிலைகள் இவற்றைக் கொண்ட ஓர் அட்டவணையைத் தயாரித்தது (அட்டவணை A) அதில் இடம் பெற்றிருந்த 15 நீர் நிலைகளில் சென்னை மாகாண அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு அணை எதுவும் கட்டக்கூடாது என்றது ஒப்பந்தம். அதே நேரம் சென்னை மாகாணத்தின் அனுபவ உரிமைக்கு (Prescriptive rights) குந்தகம் இல்லாமல் மைசூர் அணைகள் கட்டிக் கொள்ள சென்னை மாகாணம் அனுமதி மறுக்கக் கூடாது என்றும் ஒப்ப்ந்தம் சொன்னது (பகுதி-3)
இந்தப் பின்னணியில் கிருஷ்ண ராஜ சாகர் கட்டும் போது இரு தரப்பிற்கும் பிரச்சினை எழுந்தது தாவாவை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி முதலில் மைசூருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் (1914) சென்னை அரசு இங்கிலாந்தில் செய்த மேல்முறையீடு செய்ததில் அந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு 18.02.1924ல் புதிதாக ஓர் ஒப்பந்தம் உருவாயிற்று.அந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் அதன் பின் இருதரப்பும் பேசி அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது அதன் ஓர் அம்சம்.
ஆனால் 1924 ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்திலேயே, 1956ல் கர்நாடகம் தனி மாநிலமாக ஆன பின்னர், ஒப்பந்தத்தின் கூறுகளை மீற ஆரம்பித்தது. சம்யுக்த கர்நாடாக என்ற கட்சி இதை அரசியல் பிரச்சினையாக ஆக்க, அப்போதைய கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழக முதல்வர் காமராஜை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரினார் . காமராஜர் மறுத்து விட்டார்.
கர்நாடகம் தொடர்ந்து விதிகளை மீறிக் கொண்டிருந்தது. 1964ல் அது ஹேமாவதி அணையைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது என்ற போதிலும் மத்திய அரசு தமிழகத்தின் ஆட்சேபணைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது தமிழகம், கர்நாடகம், மத்திய அரசு மூன்றும் காங்கிரசிடம் இருந்தது. இருந்தும் அது தமிழகத்தின் ஆட்சேபணைகளை பொருட்படுத்தவில்லை. (தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றிருந்தால்...., மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால்.... என்றெல்லாம் இன்று நீட்டி முழக்குகிறவர்கள், இந்த அனுபவத்தையும், புதுச்சேரியின் அனுபவத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்)
மத்திய அரசின் இந்த நிலை பற்றி உச்சநீதி மன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. மத்தியிலும் கர்நாடகத்த்திலும், தமிழகத்திலும் ஒரே கட்சி ஆட்சி நடந்த போது மத்திய அரசு தக்கவாறு தலையிட்டிருந்தால் பேச்சு வார்த்தை மூலம் காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க பெரும் வாய்ப்பு இருந்திருக்கக் கூடும் என்று அது கூறியது (தினமணி 07.05.1990)

1968ல் கர்நாடகம் ஹேமாவதி அணைக்கு அடிக்கல் நாட்டியது. அதன் பின் நடந்த சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் அமைச்சரான வீரேந்திர பாட்டீல் 1924 ஒப்பந்தத்தைக் கர்நாடகா பொருட்படுத்தாது என்று அறிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, மத்தியில் ஆண்ட காங்கிரசும் 1924 ஒப்பந்தத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 1971ல் கர்நாடகச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மத்திய அரசின் நீர் வள ஆணையம், திட்டக் கமிஷன் இவற்றின் ஒப்புதல் இன்றி கர்நாடகம் கட்டிக் கொண்டிருந்த அணைகளுக்காக இந்திரா காந்தி அரசு ‘திட்டமில்லா செலவுகள்’ கீழ் 81/2 கோடி ரூபாயை அளித்தது (இது கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் தெரிவித்த தகவல்)
இரு மாநில அரசுகளுக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் தமிழக அரசு தீர்ப்பாயம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க் முனைந்தது. 1971ல் பெங்களூரில் தேர்தல் கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி காவிரிப் பிரச்சினை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விடப்படும் எனப் பேசினார். அதனால் தமிழக அரசு தனது மனுக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்காது எனக் கருதியது. ஆனால் இந்திராவின் மத்திய அரசு பல்டி அடித்து நேர் எதிரான நிலையை எடுத்த்தது. அதாவது பேச்சுவார்த்தையில் பலனில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தால்தான் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என அது உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தது (அப்போது இந்த பல்டியை விமர்சித்து கச்சேரி வைக்கத் தனியார் தொலைக்காட்சிகள் இல்லை!)
அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு இந்திரா தமிழக முதல்வர் கருணாநிதியைக் கேட்டுக் கொண்டதன் பேரில் 20.08.1972ல் கருணாநிதி வழக்கைத் திரும்பப் பெற்றார் (மத்திய அரசின் சொல்லுக்கேற்ப பணிந்து நடப்பது இன்று மட்டும் நடப்பதல்ல)
தீர்ப்பாயம் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதடியது, தீர்ப்பாயம் அமைய நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும் அதற்கு அலுவலகம் அமைத்துக் கொடுப்பது முதல் அனைத்தையும் தாமதப்படுத்தியது,தீர்ப்பாயம் கொடுத்த இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிட மறுத்தது, அந்த இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்த கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் விட்டது, எல்லாம் காங்கிரஸ் மத்தியில் ஆண்ட போது நடைபெற்றவைதான், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டவர் காங்கிரஸ் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா (2002) வீரேந்திரபாடீல், தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா, எனப் பல காங்கிரஸ் முதல்வர்கள் சீதாராமய்யா வரை, காவிரி விஷயத்தில் தமிழக நலனுக்கு எதிராக நியாயமின்றி நடந்து கொண்டவர்கள்தான்.
இந்தக் காங்கிரஸ் தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டம் நடத்த அழைக்கிறது.
காவிரி விஷயத்தில் திமுக, அதிமுக, பாஜக எல்லாம் எப்படி நடந்து கொண்டன என்ற தகவல்கள் அடுத்துத் தொடரும்.

நாளை திமுக
- மாலன் நாராயணன் தனது ஃபேஶ்புக் பக்கத்தில் எழுதியது
Original: https://m.facebook.com/story.php?story_fbid=10155183166476744&id=732076743
Comments
Post a Comment