அன்புள்ள கமல்ஹாசன்

உங்களுக்கு தேர்தல் அரசியலை விட அதிகாரத்தை விட பதவியை விட அது தரும் புகழை விட பொது நலன் முதன்மையானது என்றே எண்ணுகிறேன்.  பொது நலனுக்கான விஷயங்களில் பல தனி நபராகவும் சமூக இயக்கமாகவும் செய்திட முடியும். எடுத்து காட்டு தகவல் அறியும் உரிமை சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு, காடு நீர் வள பாதுகாப்பு, அரசியல் உரிமை, மனித உரிமை, சட்ட உரிமை பாதுகாப்பு, பூங்கா மைதானம் இன்ன பிற பொது இடங்கள் பாதுகாப்பு. இப்பணிகளையும் இவற்றின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் அரசியல் அதிகாரம் கொண்டு நிறைவேற்ற முடியாது
இவை எல்லாம் சிவில் சமூகத்திற்கு வர வேண்டிய முதிர்ச்சி, பொறுப்புணர்வு. Freedom comes with responsibility.
வேறு எவற்றையும் விட( நல்ல அரசியல்வாதி, நல்ல சட்டங்கள்) சிவில் உணர்வு அல்லது முதிர்ச்சி தான் தலையாய தேவை. காந்தி நேரடி அரசியலில் இருந்தாலும் தேர்தல் அரசியலுக்கோ அரசியல் அதிகாரத்திற்கோ போக வில்லை. அவற்றை விட சிவில் உணர்வை கட்டியெழுப்பவும் அதனுடன் உரையாடவுமே முக்கிம் என்பதை உணர்ந்திருந்தார்.

Educate:
அடுத்தது ஜனநாயக அமைப்புகளின்(பாராளுமன்றம் போன்றவை) இயங்கு முறை , அவற்றை பயன்படுத்தி கொள்ளும் முறைகளை பயின்று சக பிரஜைகளுக்கும் பயிற்றுவிப்பது. 

Organize & Revolt :
conflictகளை( லோக் பால் பயனற்றது; அரசு இயங்க தடைகல். against and for NEET . Against and for Genetically engineered Foods, Dams ,River Linking  ), புதிய சட்ட வரைவுகளை பற்றி காத்திரமான உரையாடலை முன்னெடுத்து, தீர்வுகளை எட்ட உதவுவது. அரசை நிர்பந்திக்க மக்களை ஓரணியில் திரட்டுவது. இருக்கும் உரிமைகளை தக்கவைத்துக்கொள்ள எல்லா வகையிலும் செயல்படுவது.

இவ்வாறாக செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. திரைத்துறை ஆர்வத்தில் இதில் கவனம் செலுத்த இயலவில்லை. தொபுகடீர் என்று தேர்தல் அரசியலில் விழுந்து விட்டீர்கள்.

ஒரு வேளை இந்த வழிமுறை உங்களுக்கு உகந்தது இல்லையோ என்னவோ.

Why One choose Electoral Politics over other political or Public activities ?
When one felt he can deliver perform good in power than in Movement politics .

Comments